ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்? திருமணம் எப்போது என கசிந்த தகவல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். தற்போது ஹிந்தியிலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
அவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன. ஆனாலும் அவர்கள் காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா?
இந்நிலையில் தற்போது ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடித்து இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
இருப்பினும் அவர்கள் அது பற்றி எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. இருப்பினும் இது ராஷ்மிகா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பு இதை உறுதி படுத்தவில்லை.