ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது... வெளிவந்த அறிவிப்பு
நட்சத்திர ஜோடி
தமிழ் சினிமா இல்லை எந்த மொழி சினிமா எடுத்தாலும் நட்சத்திர ஜோடிகள் இருப்பார்கள்.
தமிழில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா என இப்படி நிறைய பிரபலங்களை கூறிக்கொண்டே போகலாம். தற்போது தென்னிந்திய சினிமா கொண்டாடிய ஒரு ஹிட் ஜோடி நிஜ வாழ்க்கையில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

விஜய்-ராஷ்மிகா
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த ஜோடி தான் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா.
சில வருடங்களாக இவர்கள் காதலிப்பதாக தகவல்கள் பரவி வர இதுகுறித்து அவர்கள் எதுவும் சொல்லாமல் இருந்தனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என சொல்லப்பட இப்போது அவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மயில் நடக்க இருப்பதாக ஒரு அறிவிப்பு சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.