ஜோடியாக வெளிநாட்டில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா.. போட்டோவால் சிக்கினர்
காதல்
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள் என நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் அதை பற்றி இதுவரை வாய்திறக்க வில்லை, அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை.
விஜய் தேவரகொண்டா லைகர் படத்தின் படுதோல்விக்கு பிறகு அடுத்த படம் எதுவும் இல்லாமல் இருக்கிறார், அதே நேரத்தில் ராஷ்மிகா தற்போது வாரிசு, மிஷன் மஜ்னு ஆகிய படங்களை வைத்து இருக்கிறார்.
ஜோடியாக ட்ரிப்
அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு எல்லாம் ட்ரிப் சென்று வருகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.
ஒரே நீச்சல் குளத்தில் இருவரும் இருக்கும் இரண்டு போட்டோக்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.