10 முதல் 15 முறையாவது 'I Love You' சொல்ல சொல்லி.. ராஷ்மிகாவின் அன்பு குறித்து மனம் திறந்து பேசிய விஜய்
Rashmika Vijay Deverakonda Recent Interview: நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கணவருடன் அளித்த பேட்டியில் உறவுகளுக்கு இடையிலான அன்பு குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி அதில் அவர் என்ன கூறினார் என்பதை முழுமையாக பார்க்கலாம் வாங்க.
ராஷ்மிகா - விஜய்
திரையுலகில் ஜோடிகளாக நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா காதலிக்க தொடங்கி, அதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்வது, அங்கிருந்து எடுக்கும் புகைப்படங்களை வைத்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்கிற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

சிங்கப்பெண்ணே, மருமகள், மூன்று முடிச்சு சீரியல் மெகா சங்கமம்... வெளிவரப்போகும் மிகப்பெரிய உண்மை, புரொமோ
கடந்த பிப்ரவரி மாதம் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்தான் ரணபாலி. இப்படத்தை ராகுல் சங்கிருத்யன் இயக்கியுள்ளார். வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

மனம் திறந்து பேசிய விஜய்
இந்த நிலையில், ரணபாலி படத்தின் ப்ரோமோஷன் தொடங்கியுள்ளது. இதில் ராஷ்மிகா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக பல்வேறு பேட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். அப்படி, ஒரு பேட்டியில் தனது மனைவி ராஷ்மிகா குறித்து விஜய் தேவரகொண்டா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் அவர், "நான் மகிழ்ச்சிகரமாக திருமண வாழ்க்கையில் இருக்கிறேன்; ராஷ்மிகா எனக்கு மனைவியாக கிடைத்தது பெரிய பாக்கியம்; உறவை கையாள்வதில் நான் முதிர்ச்சியானவன்; ஆனால், ராஷ்மிகா தினமும் 10 முதல் 15 முறையாவது 'I Love You' சொல்ல சொல்லி எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அது சின்ன விஷயமாக இருந்தாலும், அந்த ஈடுபாடு உறவில் தொடர்ந்து இருக்க வேண்டும்; ஆரோக்கியமான உறவுக்கு இதுபோன்ற சின்ன விஷயங்கள் கூட பெரிதும் உதவும்" என கூறினார்.
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri