ராஷ்மிகா தன் முன்னாள் காதலருக்கு Invitation அனுப்பினாரா? அவரது நண்பர் கூறிய தகவல்

By Parthiban.A Feb 21, 2026 04:55 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா தற்போது pan இந்தியா முழுவதும் பிரபலம் ஆன ஹீரோயின். அவர் தனது கெரியரை தொடங்கியது கன்னட சினிமாவில் தான்.

ராஷ்மிகா அவரது காதலர் விஜய் தேவரகொண்டாவை வரும் பிப்ரவரி 26ம் தேதி நடக்கும் திருமணத்தில் கரம் பிடிக்க இருக்கிறார்.

அந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக உதய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடத்த இருக்கின்றனர். அந்த திருமணத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தை பணியமர்த்தி இருக்கிறார்களாம்.

ராஷ்மிகா தன் முன்னாள் காதலருக்கு Invitation அனுப்பினாரா? அவரது நண்பர் கூறிய தகவல் | Rashmika Wont Invite Ex Rakshit Shetty Says Pramod

முன்னாள் காதலருக்கு அழைப்பு?

நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் நடித்தபோது அவரை விட 13 வயது மூத்த நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் காதலில் இருந்து நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார். ஆனால் திருமணம் நின்றுபோனது.

தற்போது ராஷ்மிகா திருமணம் நடைபெறுவதால் அதற்கு முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டியை அழைத்தாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில் ரக்ஷித் ஷெட்டியின் நண்பர் பிரமோத் ஷெட்டி அளித்த பேட்டியில், "ராஷ்மிகா எங்களை எல்லாம் அழைக்க மாட்டார். ரக்ஷித் ஷெட்டி இதற்காக உட்கார்ந்து அழ ஒன்றும் சின்ன குழந்தை கிடையாது" என கூறி இருக்கிறார். இந்த பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US