இந்த ரஸ்னா விளம்பரத்தில் நடித்த சிறுமி தான் இந்த நடிகையா?.. தமிழில் கூட படம் நடித்துள்ளாரா?
80கள் ஒரு பொன்னான காலம் என்றால் 90 பற்றி சொல்லவே வேண்டாம்.
90ஸ் கிட்ஸ்கள் ரசித்து குடித்த பானங்களில் ஒன்று ரஸ்னா.
குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய இந்த ரஸ்னா சிறுவர்களின் பேவரெட்டாக இருந்தது. அப்படிபட்ட இந்த ரஸ்னா விளம்பரத்தில் ஒரு குட்டி சிறுமி நடித்திருப்பார், இவர் வளர்ந்து நாயகியாக அதிக படங்களும் நடித்துள்ளார்.
யார் அவர்
இந்த சிறுமியின் பெயர் தான் அங்கிதா ஜவேரி, 2002ல் தெலுங்கில் வெளியான தனலட்சுமி ஐ லவ் யூ, கன்னடத்தில் வெளியான ஸ்ரீராம் படத்தில் நடித்தவர் தமிழில் 2005ம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த லண்டன் படத்தில் நடித்தார்.
பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் விஷால் ஜக்தாப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.