வெளிவந்து ஐந்து வருடங்கள் ஆகும் ப்ளாக் பஸ்டர் ராட்சசன் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
ராட்சசன்
தமிழ் சினிமாவின் டாப் 5 திரில்லர் படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக ராட்சசன் படமும் இடம்பெறும். ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன்.

இது இவர்களுடைய கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படமாகும். இதற்குமுன் முண்டாசுப்பட்டி எனும் வெற்றி படத்தையும் இந்த கூட்டணி கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து வெளிவந்த ராட்சசன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனைகளை படைத்தது.
குறிப்பாக க்ரிஸ்டோபர் கதாபாத்திரம் மிரட்டலாக இருந்தது தான் படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம்.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், உலகளவில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ராட்சசன் திரைப்படம் உலகளவில் ரூ. 38 முதல் ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராட்சசன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் தற்போது புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாய் வாழ்ந்த காதலி; வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற காதலன் - அதிரடி திருப்பம் IBC Tamilnadu
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri