எதிர்பார்ப்பை பெருசா வெச்சுக்கோங்க.. லியோ அப்டேட் கொடுத்த முக்கிய பிரபலம்
லியோ
விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது லியோ படத்தில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார் பேட்டியில் ஒரு அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

எதிர்பார்ப்பை பெருசா வெச்சுக்கோங்க
ரத்னகுமார் அளித்த பேட்டியில் "உங்க எதிர்பார்ப்பை பெருசா வெச்சிக்கோங்க, லியோ படம் அதை விட பெரியதாக இருக்கும்."
பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக வேண்டும், எல்லா மொழிகளுக்கும் டைட்டில் சரியாக இருக்க வேண்டும் என்பதால் தான் லியோ என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டது.
இன்னும் சில தினங்களில் நானும் காஷ்மீர் செல்ல இருக்கிறேன். இது தான் இப்போதைக்கு அப்டேட் என ரத்ன குமார் கூறி இருக்கிறார்.
