அஜித் படத்தை கிண்டல் செய்தாரா இயக்குனர் ரத்னகுமார்.. அவரே வெளியிட்ட பதிவு
இயக்கியவர் ரத்தனகுமார்
தமிழ் திரையுலகில் மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பின் ஆடை எனும் படத்தை இயக்கியவர் ரத்தனகுமார்.
இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த மாஸ்டர் படத்தில் வசனம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து இன்று வெளிவந்துள்ள கமல் ஹாசனின் விக்ரம் படத்திலும் வசனம் எழுதியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இயக்குனர் ரத்னகுமார், லோகேஷ் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.
அஜித் படத்தை கிண்டல் செய்தாரா
அந்த வகையில் தற்போது விக்ரம் படம் குறித்து ' Loki Sambavam வாழ்த்துக்கள் நண்பா லோகேஷ் கனகராஜ் " என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் குடும்பங்கள் கொண்டாடும் என்று ஒரு போல்டெர் ஒன்று உள்ளது.
இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம், வலிமை ஆகிய படங்கள் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. இதை குறிப்பிட்டு தான் ரத்னகுமார் இப்படியொரு பதிவு வெளியிட்டுள்ளாரா என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Loki Sambavam ??.
— Rathna kumar (@MrRathna) June 3, 2022
வாழ்த்துக்கள் நண்பா @Dir_Lokesh. #Vikram pic.twitter.com/JpOyLyMtaM