இந்தியன் 2, ஜெயிலர் பட பிரபலங்கள் ஒன்றாக கொண்டாட்டம்.. காரணம் இதுதான்
இணைந்து கொண்டாடிய பிரபலங்கள்
தமிழ் சினிமாவின் பிரமாண்ட படங்களாக உருவாகி வரும் திரைப்படங்கள் இந்தியன் 2 மற்றும் ஜெயிலர்.
இதில் இந்தியன் 2 படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிபவர் ரத்னவேல். அதே போல் ஜெயிலர் படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் கிரண்.
25 ஆண்டுகள் நிறைவு செய்த ரத்னவேல்
இவ்விருவரும் நடிகை வரலக்ஷ்மியுடன் இணைந்து கமர்ஷியல் Add ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்துள்ளார்கள். இதை இயக்குனர் சரவணன் LG இயக்கினார்.
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் ரத்னவேல் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதன் காரணமாக இந்த படப்பிடிப்பின் போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.
மேலும், ரத்னவேலு அவர்களின் முதல் படம் சரத்குமாரின் அரவிந்தன் படம், தற்போது 25 வருடம் கழித்து அவருடைய மகள் வரலட்சுமியுடன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

