ஜாதி படம்.. 'ரத்னவேலு' பஹத் பாசிலை அணுகிய இயக்குனர்! என்ன பதில் சொன்னார் பாருங்க
சமீபத்தில் மாமன்னன் படம் ஓடிடியில் வெளியான பிறகு அந்த படத்தை நெட்டிசன்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் வில்லனாக காட்டிய ரத்னவேலு கதாபாத்திரத்தை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவுகள் வர தொடங்கியது.
ஜாதி பெருமை பேசும் பாடல்கள் சேர்ந்து ரத்னவேலு பஹத் பாசிலின் காட்சிகளை ட்விட்டரில் வைரல் ஆக்கி வந்தனர் நெட்டிசன்கள்.
மேலும் ரத்னவேலு லுக் புகைப்படங்களை பஹத் பாசில் முகநூலில் கவர் படமாக பதிவிட்டதும் வைரல் ஆனது. ஆனால் அதன் பின் சர்ச்சை காரணமாக அதை நீக்கிவிட்டார்.
ஜாதி படத்திற்காக அணுகிய இயக்குனர்
இந்நிலையில் பஹத் பாசிலை இயக்குனர் மோகன்.ஜி ஒரு புது படத்திற்காக அணுகி இருக்கிறாராம். ரத்னவேலு என்ற பெயரிலேயே படம் இயக்குவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
ஆனால் பஹத் பாசில் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டாராம். அதற்கு பிறகு தான் பஹத் பேஸ்புக் கவர் படத்தை நீக்கினார் என்றும் கூறப்படுகிறது.
இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா? அவரா இது..