எம். ஆர். ராதா ரத்தக்கண்ணீர் படத்திற்க்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா
எம். ஆர். ராதா
தமிழ் சினிமாவின் 60 ஆண்டுகளில் புரட்சி தலைவர் மற்றும் நடிகர் திலகத்திற்கு இணையாக பேசப்பட்டவர் நடிகவேல் எம் ஆர் ராதா. தன் கருத்து பேச்சாலும் கம்பீரமான குரலாலும் அனைத்து மக்களை கவர்ந்திருந்தவர்.
எம்.ஆர்.ராதா நடிப்பில் கடந்த 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரத்தக்கண்ணீர், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை குவித்தது.
அப்படியான ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட நிபந்தனைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற மேடை நாடக நடிகரான எம்.ஆர்.ராதா தனது நாடகத்தை முடித்த பின் தான் இப்படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார்.
ரத்தக்கண்ணீர்
மேலும் அவ்வையார் படத்திற்க்காக கே.பி.சுந்தராம்பாள்-க்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே தனக்கு கே.பி.சுந்தராம்பாளை விட ரூ, 25000 அதிக சம்பளம் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.
இதற்கு படத்தின் தயாரிப்பாளரும் சம்மதித்துள்ளார். படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று முன்னணி நடிகர்கள்

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
