மூன்று நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விஜய் ஆண்டனி
தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை மற்றும் ரத்தம் என இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் மொத்தம் நான்கு திரைப்படங்கள் திரைக்கு வந்தது.
இதில் பிச்சைக்காரன் 2 வெற்றியடைந்த நிலையில், தமிழரசன் மற்றும் கொலை ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் கடந்த வாரம் வெளிவந்த ரத்தம் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரத்தம் வசூல் விவரம்
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ரத்தம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 2.8 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan