கேஜிஎப் பட நடிகை ரவீனா டாண்டன் மீது தாக்குதல்.. வைரலாகும் வீடியோ
யாஷ் நடித்த கேஜிஎப் 2 படத்தில் ராமிகா சென் ரோலில் மிரட்டலாக நடித்து இருந்தவர் ரவீனா டாண்டன். ஹிந்தி நடிகையான அவர் அந்த படம் மூலமாக தென்னிந்தியாவிலும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் ரவீனா காரில் சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
தாக்குதல்
ரவீனா டாண்டன் மற்றும் அவரது டிரைவர் மும்பையில் மோசமாக கார் ஒட்டியதாக கூறி சில பெண்கள் சண்டை போயிருக்கின்றனர். மேலும் ரவீனாவையும் அவர்கள் தாக்கி இருக்கின்றனர். என்னை அடிக்காதீங்க என ரவீனா கூறுவது அந்த வீடியோவில் பதிவாகி இருகிறது.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இரு தரப்பும் புகார் எதுவும் கொடுக்காத நிலையிலும் விசாரணை நடந்து இருக்கிறது.
ரவீனா மற்றும் அவரது டிரைவர் போதையில் இருந்ததாக பரவும் செய்தி பொய்யான குற்றச்சாட்டும் என்றும் போலீசார் விளக்கம் கொடுத்து இருக்கின்றனர். அவரது கார் யாரையும் இடிக்கவில்லை, இருப்பினும் கார் ரிவர்ஸ் எடுக்கும்போது சில பெண்கள் மீது இடிப்பது போல சென்றதால் தான் பிரச்சனை வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
BREAKING: Muslim mob surrounded actress Raveena Tandon with the intent to lynch her in Mumbai, Maharashtra.
— Treeni (@TheTreeni) June 2, 2024
Allegations were made that her car hit a Muslim woman and her driver assaulted a family.
However, CCTV footage contradicts these claims, proving the allegations false… pic.twitter.com/RYJVFdWqS0