தெலுங்கு படத்தில் நடிக்கப்போகும் பாலிவுட் நடிகை ரவீணாவின் மகள்... யாருடைய படம் தெரியுமா?
ரவீணா
இந்திய சினிமாவில் 80, 90களில் கலக்கிய நடிகைகளை எப்போதும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
அப்படி ஹிந்தி சினிமாவில் 90களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரவீணா டாண்டன். தமிழில் அர்ஜுனுடன் சாது, கமலுடன் ஆளவந்தான் படங்களில் நடித்திருக்கிறார்.
கன்னட சினிமாவில் மாஸ் வெற்றியடைந்த கே.ஜி.எஃப் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இப்போதும் படங்கள் நடிக்கிறார்.
தமிழில் சூர்யாவின் 46வது படத்தில் இவர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
நடிகை மகள்
அனில் தடானி என்பவரை திருமணம் செய்த இவருக்கு ராஷா தடானி, ரன்பீர் வர்தன் என ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
அதோடு இவர் பூஜா, சாயா என 2 பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இவரது மகள் ராஷா, ஆசாத் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார், படம் வெற்றிப்பெறவில்லை என்றாலும் அவர் இடம்பெற்ற பாடல் படு ஹிட்.
தற்போது இவர் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறாராம். மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபு மகன் ஜெய கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் தான் ரவீனா மகள் நாயகியாக நடிக்கிறாராம்.

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
