உருவகேலி, பொய் போன்ற விஷயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நடிகை- வருத்தத்தில் அவர் கூறிய விஷயம்
ரவீனா தாண்டன்
பாலிவுட் சினிமாவில் 1990களில் முன்னணி நாயகியாக நடித்து வந்தவர் ரவீனா தாண்டன். தமிழில் அர்ஜுனின் சாது, கமல்ஹாசனின் ஆளவந்தான் படங்களில் நடித்துள்ளார், தெலுங்கிலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.
துபாயில் நடிகை ஸ்ரீதேவி மரணத்தின் போது என்ன நடந்தது?- 5 ஆண்டுக்கு பின் முதன்முறையாக பேசிய போனி கபூர்
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் அக்ஷ்ய் குமாரை ரவீனா தாண்டன் திருமணம் செய்வதாக இருந்ததாம், நிச்சயதார்த்தம் கூட முடிந்துள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
பின் 2014ம் ஆண்டு ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளை பெற்றுள்ளார. இவர் 2 குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.
நடிகையின் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ரவீனா பேசும்போது, எனது குழந்தைகளிடம் என்னை பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லிவிடுவேன், காதல விஷயங்களை எல்லாம் மறைத்தால் ஒரு காலத்தில் தெரியவரும்போது பிரச்சனை ஆகிவிடும்.
சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை பற்றி மோசமாக பேசினார்கள், உருவகேலி செய்தனர். எனக்கு எதிராக பொய் தகவல்களை பரப்பினார்கள்.
அந்த காலத்தில் பொய் தகவல்கள் தான் மக்களை சென்று அடைந்தது, இப்போது சமூக வலைதளங்கள் இருப்பதால் எங்கள் கருத்துக்களை சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.