பேரனின் புகைப்படத்தை வெளியிட்ட 48 வயதாகும் நடிகை ரவீணா.. புகைப்படத்துடன் இதோ
ரவீணா டாண்டன்
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருக்கும் ரவீணா டாண்டன் தமிழில் பரிச்சயமானது கமலின் ஆளவந்தான் படத்தின் மூலம் தான்.
இதன்பின், கடந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரவீணா கடந்த 1995ஆம் ஆண்டு பூஜா {11 வயது} மற்றும் சாயா {8 வயது} ஆகியோரை தத்தெடுத்து கொண்டார்.
இதன்பின் 2003ஆம் ஆண்டு பிரபல விநியோகஸ்தர் அனில் தடானி என்பவரை சந்தித்து காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த காதல் தம்பதிக்கு 2005ஆம் ஆண்டு ஒரு அழகிய பெண் குழந்தையும் {ராஷா} பிறந்தது. இதன்பின் 2008ஆம் ஆண்டு ஒரு மகனும் {ரன்பீர் வர்தன்} பிறந்தார்.
பேரன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
இந்நிலையில், திருமணத்திற்கு பின் ரவீணா தத்தெடுத்த சாயாவிற்கு திருமணம் நடந்து தற்போது 4 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
நடிகை ரவீணா தனது பேரனின் பிறந்தநாள் ஆண்டு வாழ்த்து தெரிவித்து பேரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.