நடிகர் ரவி மரியா திடீரென போலீசில் புகார்! அவர் பெயரில் இப்படி ஒரு மோசடியா?
ரவி மரியா
சில படங்களை இயக்கிய பின் குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பவர் ரவி மரியா.
அவர் கூர்க்கா, தேசிங்குராஜா உள்ளிட்ட பல படங்களில் காமெடியாக நடித்து இருப்பார். அதிலும் குறிப்பாக தேசிங்கு ராஜா படத்தில் 'மாப்ளைக்கு அவ்ளோ வெறி' என சூரியை பார்த்து அவர் சொல்லும் வசனம் தற்போதும் மீம் டெம்ப்லேட் ஆக இணையத்தில் இருந்துகொண்டிருக்கிறது.

போலீசில் புகார்
ரவி மரியா பிரபல நடிகராக இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பெயரில் யாரோ சிலர் போலியான இன்ஸ்டா கணக்கு தொடங்கி பணம் பறித்து வருவதாக போலீசில் புகார் தெரிவித்து இருக்கிறார்.
அதனால் இன்ஸ்டாகிராமில் தன் பெயரில் யாரவது பணம் கேட்டு மெசேஜ் செய்தால் நம்ப வேண்டாம், பணம் எனுப்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

Baakiyalakshmi: வயிற்றெரிச்சலில் ராதிகா.. எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கோபி