சினிமாவில் இருந்து விலகி இந்த இடத்தில் செட்டில் ஆகிவிடுவேன்.. ஷாக் கொடுத்த ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் பொங்கல் ஸ்பெஷலாக அவரது காதலிக்க நேரமில்லை படம் ரிலீஸ் ஆகி இருந்தது.
போகி அன்று ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொள்வதாக அறிவித்தார். பழையன கழிதலும், புதியன புகுதலும் என குறிப்பிட்டு தனது பெயரை அவர் மாற்றிக்கொண்டார்.
இமய மலை
விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறார், அஜித் கார் ரேஸ் செய்கிறார். அது போல நீங்கள் சினிமாவுக்கு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என சமீபத்திய பேட்டியில் ரவி மோகனிடம் கேட்டதற்கு சொன்ன பதில் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.
தான் இமய மலையில் செட்டில் ஆகிவிடுவேன் என அவர் கூறி இருக்கிறார். ஏற்கனவே விவாகரத்து அறிவித்துவிட்ட அவர் தற்போது இப்படி ஒரு பதில் கூறி இருப்பது பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
