ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட பிறப்பித்து இருக்கிறது. வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆர்த்தி தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை போட்டிருக்கிறது.

அனுமதி
மேலும் மகன்களை ரவி மோகன் பார்க்க அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது. மகன்களை பார்க்க முடியாமல் இருப்பதாக ரவி மோகன் முன்பு அளித்த பேட்டியில் பேசி இருந்த நிலையில் தற்போது visitation rights வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.
ரவி மோகன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவரது நடிப்பில் கராத்தே பாபு படம் வெளிவர இருக்கிறது.