கெனிஷாவுடன் உறவா! நான் பட்ட கஷ்டங்களை சொல்லவா.. நடிகர் ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை

By Kathick May 15, 2025 10:00 AM GMT
Report

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கெனிஷா என்பவருடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசு எழுந்தது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார்.

இதன்பின் இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என பலரும் உறுதியாகவும் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பின், தனது மகன்கள் போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் அவர் கடும் கோபத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தது.

கெனிஷாவுடன் உறவா! நான் பட்ட கஷ்டங்களை சொல்லவா.. நடிகர் ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை | Ravi Mohan Kenishaa Controversy Explanation

மேலும் பல சினிமா பிரபலங்களும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், தனது Girl friend-காக மும்பையில் ரூ. 10 கோடி செலவில் புதிய வீடு வாங்கி கொடுத்துள்ளாராம் ரவி மோகன். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகள் இணையத்தில் உலா வரும் நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவி மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை

இதில், "எனது காயங்களை உணராமல் என்னை கேள்விக்குள்ளாக்குவதால், நான் பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை நான் உருவாக்கி இருக்கிறேன். சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் உறுதியாக இருக்கிறேன்" என குறிப்பிட்டள்ளார்.

மேலும் "இத்தனை ஆண்டுகள் முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன்.எனது குழந்தைகளை வைத்து பொதுவான சித்தரிப்பு மூலம், நிதி ஆதாயம் அடைய முயற்சி. எனது குழந்தைகளை பார்க்க முடியாமல், பவுன்சர்கள் மூலம் தடுக்க முயற்சி நடக்கிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின் கெனிஷா குறித்து அந்த அறிக்கையில் ஜெயம் ரவி கூறியிருப்பது,

கெனிஷாவை பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரை காப்பாற்ற தேர்ந்தெடுத்த ஒரு தோழி அவர். என்னை உடைத்து கொண்டிருந்த ஒரு வாழ்க்கையில் இருந்து விலகி செல்ல தைரியம் மட்டுமே இருந்த எனக்கு, அவர் ஒரு உயிர்நாடியாக மாறினார்.

எனது பயணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்களுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதும் கெனிஷா எனக்காக நின்றார். சூழ்நிலையை உணர்ந்து தயங்காமல் வந்த ஒரு அழகான துணை அவர். என் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தவர்.

நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக போராடும் அனைத்து போராட்டங்களையும் கெனிஷா நேரடியாக பார்த்தார். புளுக்காகவோ, கவனத்திற்காகவோ அல்லாமல், இரக்கத்துடன் வலிமையுடன் என்னுடன் இறக்க தீர்மானித்தார். நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர் தான்.

கெனிஷாவுடன் உறவா! நான் பட்ட கஷ்டங்களை சொல்லவா.. நடிகர் ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை | Ravi Mohan Kenishaa Controversy Explanation

45 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் வாங்கும் தீபிகா படுகோன்.. எவ்வளவு தெரியுமா

45 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் வாங்கும் தீபிகா படுகோன்.. எவ்வளவு தெரியுமா

உங்கள் வாழ்க்கையிலும் ஒரு ஒளியை காண்பீர்கள் என்று நம்புகிறேன். கெனிஷா எனக்கும் என் பெற்றோருக்கும், என்னை தொடர்ந்து வழிநடத்திய என் குழுவினருக்கும் செய்த காரியம் மிகவும் மரியாதைக்குரியது.

அவரின் நடத்தையையும் தொழிலையும் அவமதிக்கும் ஒரு சிறிய கிண்டலை கூட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர் ஒரு தெரபிஸ்ட். அதைவிட அவர் அற்புதமான பாடகி. ஆரம்பத்தில் என் கதையை சுருக்கமாக கேட்ட நிமிடத்தில் இருந்து, எனக்கு ஒரு தோழியாக மட்டும் உதவுவேன் என்றும் தெரபிஸ்ட்டாக உதவ மாட்டேன் என்றும் உறுதியளித்தார். ஏனென்றால் அது சட்டத்திற்கு எதிரானது.

மிரட்டி பணம் புரிபவர்களின் குடும்பத்துடன் துன்பப்பட்டதை என்னைவிட வேறு யாரும் அதிகமாக புரிந்துகொள்ள முடியாது. கெனிஷா உடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமே இல்லாதவாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், எனக்கு உண்மை தெரியும்.

என்னை அறிந்தவர்கள் என் உணர்வு தெரியும். என்னை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், கெனிஷாவிற்கும் அதையே செய்வீர்கள் என நம்புகிறேன். என் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது. நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியுமா" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US