விவாகரத்து கேட்ட பின் மீண்டும் மகன்களுடன் இணைந்த ரவி மோகன்! படுவைரல் ஆகும் புகைப்படம்
நடிகர் ரவி மோகன் கடந்த சில மாதங்களில் பல்வேறு பரபரப்பான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டது, மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது, கெனிஷா என்ற பாடகி உடன் நெருக்கமானது என அவரை பற்றிய செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருக்கின்றன.
சமீபத்தில் கெனிஷா பாடிய பாடல் வரவேற்பை பெற்றதற்காக ரவி மோகன் சினிமா துறையினருக்கு பார்ட்டி கொடுத்து இருந்தார்.

மறுபுறம் ரவி மோகன் - ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை பற்றி அறிக்கை எதுவும் வெளியிட கூடாது என நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.
ரவி மோகன் தனது மகன்களை கூட விட்டுவிட்டு போய்விட்டார் என ஆர்த்தி முன்பே குற்றம்சாட்டி இருந்தார்.

மகன்களை சந்தித்த ரவி மோகன்
இந்நிலையில் இன்று ரவி மோகன் தனது இரண்டு மகன்களையும் சந்தித்து பேசி இருக்கிறார். மூத்த மகன் ஆரவ் பிறந்தநாள் என்பதால் அவர் சந்தித்து கொண்டாடி இருக்கிறார்.
அந்த போட்டோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu