தனி ஒருவன் 2 எப்போது? இயக்குநர் சொன்ன விஷயம்.. ரசிகர்கள் வருத்தம்!
தனி ஒருவன்
தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதையில் உருவான திரைப்படங்களில் ஒன்று தனி ஒருவன். இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடித்த இப்படம் 2015ல் வெளிவந்தது.
இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். மேலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், கடந்த 2023ம் ஆண்டு தனி ஒருவன் 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வீடியோவுடன் வெளிவந்தது.

எப்போது?
இந்நிலையில், தற்போது இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, அர்ச்சனா கல்பாத்தியுடன் நான் இப்படம் தொடர்பாக பேசி கொண்டு தான் வருகிறேன். அதற்கு அவர், இது சரியான நேரம் இல்லை. இது கண்டிப்பாக நடக்கும், ஆனால் கொஞ்சம் சினிமா துறையின் நிலை மேம்படட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இப்படம் நாம் நினைத்தது போன்று விரைவில் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    