பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிறகு ரவி மோகன் எடுத்த முடிவு... போட்டோவுடன் இதோ
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றவர் ரவி மோகன். சில வருடங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜாவாக நடித்து மக்களின் இதயத்தில் பெரிய இடம் பிடித்தார்.

சினிமாவில் முன்னேறி வந்தவருக்கு கடந்த வருடத்தில் இருந்து சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்கிறேன் என கூறினார், பின் பெயரை மாற்றினார், வீடு, அலுவலகம் என எல்லாவற்றையும் மாற்றினார். ரவி மோகன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என பார்ப்பதற்குள் எல்லாம் மாறிவிட்டது.
புதிய லுக்
கடந்த சில நாட்களுக்கு முன் ரவி மோகன், தனது மனைவி தரப்பில் இருந்து நிறைய பிரச்சனைகள் தருவதாக கூறி கண்ணீர்விட்டு அழுதிருந்தார். குழந்தைகளை பார்க்க தடுக்கிறார்கள், தனக்கு பிளாக் மேஜிக் செய்துள்ளார்கள் என இப்படி நிறைய குற்றம் சாட்டினார்.

விரைவில் எல்லா ஆதாரத்துடன் உங்களை சந்திக்கிறேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரவி மோகன் தனக்கு ஏற்பட்ட மன வேதனையில் இருந்து வெளியே வர தற்போது ஐயப்ப சாமி விரதம் மேற்கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தான் வெளியாகியுள்ளது. இதோ,
