சென்னையில் உள்ள பங்களாவை ஐப்தி செய்ய வந்த நோட்டீஸ், நடிகர் ரவி மோகன் செய்த செயல்...
ரவி மோகன்
ரவி மோகன், தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லாத ஒரு நடிகராக வலம் வந்தார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது சொந்த வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் வெளியாக அவர் குறித்து மோசமாக விமர்சனம் செய்பவர்கள் அதிகமாகிவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் குற்றங்கள் கூறி சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக்கொள்ள நீதிமன்ற இதுபோல் செய்யக் கூடாது என்றதால் அமைதியாகியுள்ளனர்.
சமீபத்தில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
வங்கி நோட்டீஸ்
தற்போது நடிகர் ரவி மோகனுக்கு வங்கியில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. 10 மாதங்களாக தவணை செலுத்தாத நிலையில் ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய HDFC வங்கி நோட்டீஸ் அனுப்பியது.
கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை பெற்றுக் கொள்ள நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்து, வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ஊழியரை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.