சில பேர் இருக்காங்க.. மேடையில் யாரை இப்படி சொன்னார் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார் அவர்.
அதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. அதில் கார்த்தி, சிவகார்த்திகேயன், மோகன் ராஜா, ஜெனிலியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சில பேர் இருக்காங்க
தன்னை வாழ்த்த வந்தவர்களுக்கு நன்றி கூறிய ரவி மோகன், அவர்கள் எல்லோரையும் மனதில் எப்போதும் வைத்து இருப்பேன் என கூறி இருக்கிறார்.
"வாழ்த்தணும் என நினைக்குறவங்க இங்கே வந்திருக்கீங்க, வாழ்த்துங்க. என்னை வாழ்த்த வேண்டாம் என நினைக்கும் சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் சொல்வது, நான் இங்கே தான் இருப்பேன். வேறு எங்கும் போக மாட்டேன். வளர்ந்துகொண்டே தான் இருப்பேன். நன்றி" என ரவி மோகன் கூறி இருக்கிறார்.

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
