அச்சு அசல் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் அறிமுக நடிகை.. அசந்துபோன ரசிகர்கள்

Kathick
in பிரபலங்கள்Report this article
ரவி தேஜா
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் கடைசியாக டைகர் நாகேஸ்வர் ராவ் எனும் திரைப்படம் வெளிவந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக ஈகிள் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் டீசர் வெளிவந்த வரவேற்பை பெற்றது.
இதன்பின் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் யார் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறார் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இப்படத்தில் புதுமுகம் தான் கதாநாயகியாக நடிக்க போகிறார் என அதன்பின் தகவல் வெளிவந்தது.
ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் நடிகை
இந்நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிமுக நாயகி பாக்கியஸ்ரீ போர்ஸ் என்பவர் தான் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளாராம்.
இவரை பார்த்த ரசிகர்கள் பலரும் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள். இதோ அவரின் புகைப்படம்..