கருணை காட்டி படத்தை ஓடவைக்க கூடாது.. அதிரடியாக பேசிய அயலான் இயக்குனர் ரவிக்குமார்
ரவிக்குமார் - அயலான்
இன்று நேற்று நாளை எனும் மாபெரும் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். முதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குனர் ரவிக்குமாருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் முறையாக டிராவல் கதைக்களத்தை வைத்து படம் இயக்கியதும் இவர் தான். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படம் கடந்த 5 ஆண்டுகளாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சில காரணங்களால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனால், தற்போது அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது அயலான். இப்படத்தில் கிட்டதட்ட 3000 CG ஷாட்ஸ் இருக்கிறது என்றும், இதற்காக கடுமையாக உழைத்துள்ளார்கள் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதை நாம் சமீபத்தில் வெளிவந்த டீசரில் கண்கூடாக பார்த்தோம்.
ரவிக்குமார் பேட்டி
இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமார் அயலான் குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் 'படத்திற்காக பட்ட கஷ்டங்கள், பின்னணி வேலைகள் எல்லாம் மக்களுக்கு தேவையில்லை. படம் சுவாரஸ்யமாக இருக்கிறதா இல்லையா படம் மக்களுக்கு பிடிக்குமா இல்லையா என்பது தான் முக்கியம். அப்படி படம் மக்களுக்கு பிடித்துவிட்டால் அப்போது நாங்கள் பட்ட கஷ்டங்களையும், எங்களுடைய உழைப்பை பற்றியும் பேசலாம்'.

'எங்களுக்கு படம் எடுக்க சில காலங்கள் ஆகிவிட்டது என்று கூறி, கருணை காட்டி படத்தை ஓட வைக்க முடியாது. நன்றாகவும் திறமையாகவும் வேலை செய்திருந்தால் கண்டிப்பாக படம் ஓடும். அப்படி நன்றாக வேலை செய்து இருக்கிறோம் என நம்புகிறோம்' என பேசியிருந்தார் இயக்குனர் ரவிக்குமார். இவருடைய இந்த அதிரடியான பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.