பணத்திற்காக தான் இரண்டாம் திருமணம் செய்தேனா? நடிகை மஹாலக்ஷ்மி ட்ரோல்களுக்கு பதிலடி
பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் தான் நேற்று முன்தினம் இருந்து இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.
திருமணம்
திருப்பதியில் நடந்த திருமணத்தை பற்றி அவர்கள் மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். முந்தைய நாள் சீரியல் ஷூட்டிங்கில் இருந்து கிளம்பும்போது கூட அவர் சக நடிகர்களிடம் அது பற்றி சொல்லவே இல்லையாம். அதனால் திருமண போட்டோ வெளியானதும் அனைவரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
திருமணம் எளிமையாக யாருக்கும் தெரியாமல் நடைபெற்றாலும் சென்னையில் பெரிய அளவில் ஒரு ரிசப்ஷன் நடத்த இருக்கிறார்களாம்.

ட்ரோல்களுக்கு பதில்
ரவீந்தர் - மஹாலட்சுமி திருமண போட்டோ வெளியானதில் இருந்து ட்ரோல்கள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அவர் தயாரிப்பாளர் என்பதால் பணம் அதிகம் இருக்கும், அதனால் தான் தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்திருக்கிறாரோ என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.
இது பற்றி மஹாலக்ஷ்மி பதிலடி கொடுத்து இருக்கிறார். 'அவர் வந்து என்னிடம் ப்ரொபோஸ் செய்தபோது நான் தான் வேண்டாம் என சொன்னேன். என்னை பற்றி எதுவும் தெரியாமல் என்னை திருமணம் செய்துகொள்ள நினைக்க வேண்டாம் என கூறினேன். நான் பணத்தை மட்டும் பார்ப்பவர் என்றால் முதலில் நான் தானே அவரிடம் ப்ரொபோஸ் செய்திருக்க வேண்டும். நான் மனதை மட்டும் தான் பார்த்தேன்' என கூறி இருக்கிறார்.

ரவீந்தர் பேசும்போது 'தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் பணம் வைத்திருக்கிறேனா. பணம் வைத்துக்கொண்டு அழகாக நல்ல தோற்றத்தில் வேறு எந்த ஆணும் இல்லையா. என்னை ஏன் அவர் திருமணம் செய்ய வேண்டும்.'
'திருமணத்திற்கு அவரது வீட்டில் இருந்து தான் எனக்கு நகைகள் போட்டிருக்கிறார்கள், நான் எதுவும் போடவில்லை. காதலிக்க தொடங்கியதில் இருந்து மஹாலக்ஷ்மி தான் எனக்கு கிப்ட் மாதம்தோறும் வாங்கி கொடுத்துக்கொண்டிருக்கிறார். நான் இதுவரை ஒரு கிப்ட் கூட வாங்கி கொடுத்ததில்லை' என கூறி இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகுகிறாரா இந்த முக்கிய பிரபலம்- ரசிகர்கள் ஷாக்