பிக் பாஸ் போட்டியாளராக வரும் சீரியல் நடிகையின் கணவர்! சர்ச்சை பிரபலம் தான்
பிக் பாஸ் 8வது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் சர்ச்சையான பிரபலங்களை தான் தேடித்தேடி போட்டியாளர்களாக கொண்டு வருவார்கள். அது போல இந்த வருடம் வரப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
நடிகையின் கணவர்
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் போட்டியாளராக வரப்போவது உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. அவர் பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியின் கணவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ரவீந்தர் பிக் பாஸ் பற்றி தொடர்ந்து விமர்சனங்களை கடந்த பல வருடங்களாக வைத்து வருகிறார்.
சமீபத்தில் பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிக்கி சில மாதங்கள் சிறையில் இருந்து அதன் பின் ஜாமினில் வெளிவந்தவர் ரவீந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.