ராதிகாவின் பிறந்தநாளில் ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட மகள் ரேயான் மிதுன்.. இதோ பாருங்க
ராதிகா
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை ராதிகா சரத்குமார்.
இவர் நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகை ராதிகாவின் மகள் ரேயான் மிதுன் தனது அம்மாவிற்கு பிறந்தநாளை வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மகள் வெளியிட்ட வீடியோ
இந்த பதிவில் ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரேயான், "என்னுடைய துவக்கமும் நீங்கதான், முடிவும் நீங்கதான். நீங்கதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட், என் பலம், என் எல்லாமுமே. உங்க மகளா இருக்குறதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு" என குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..