ரசிகர்களை கடுமையாக எச்சரித்த ஷங்கர், ராம் சரண் படக்குழு ! என்ன காரணம் தெரியுமா?
இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான ராம் சரணை வைத்து RC 15, படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் இப்படம் குறித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் "இயக்குநர் ஷங்கர் - ராம்சரண் இணையும் படத்தின் தேவைக்காக திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் படபிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியின்றி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பதிவிடக் கூடாது. அப்படி பதிவிட்டால் எங்கள் குழு நடவடிக்கை எடுக்கும். அதனால் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் அப்படி ஏதாவது பதிவுகளைப் பார்த்தால் உடனடியாக report@blockxtech.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.
We request everyone to cooperate with the team and report any piracy links to report@blockxtech.com#RC15 #SVC50 pic.twitter.com/M0vswZVV1A
— Sri Venkateswara Creations (@SVC_official) February 16, 2022