ரீ ரிலீசான பாபா.. வசூல் எவ்வளவு தெரியுமா
பாபா ரீ ரிலீஸ்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாபா.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, விஜயகுமார், கவுண்டமணி, நம்பியார், ஆஷிஷ் வித்யார்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் அப்போது வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்தது. இதன்பின் 20 ஆண்டுகள் கழித்து தற்போது பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்தார் ரஜினிகாந்த்.
வசூல்
கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து உலகளவில் சாதனை படைத்தது.
இந்நிலையில், இதுவரை ரீ ரிலீஸான எந்த ஒரு திரைப்படமும் பாபா அளவிற்கு வசூல் சாதனை செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.