படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம்
படையப்பா
ரஜினிகாந்த் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய திரைப்படங்களில் ஒன்று படையப்பா. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து 1999ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 1999ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற இப்படத்தை தற்போது 25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்கின்றனர்.
முன்பதிவு
நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்படும் படையப்பா படத்தின் முன் பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த முன்பதிவில் ரூ. 85+ லட்சம் வசூல் வந்துள்ளது.

இதற்கு முன் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் கில்லி திரைப்படம் முதல் நாள் ரூ. 3.5 கோடி வசூல் செய்தது. அதை படையப்பா படம் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.