ரீ ரிலீஸான சச்சின் படம் 2 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
சச்சின்
இயக்குநர் ஜான் மஹேந்திரன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சச்சின்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். மேலும் வடிவேலு - விஜய் கம்போ வேற லெவலில் ஒர்கவுட் ஆகியிருக்கும்.
இன்று வரை இப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும் மற்றும் டி எஸ் பியின் பாடல்களும் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்துள்ளது. ஆம், கடந்த 18ம் ஆண்டு சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல் விவரம்
இந்த நிலையில், ரீ ரிலீஸில் 2 நாட்களில் இப்படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சச்சின் திரைப்படம் 2 நாட்களில் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளது.