ரீ ரிலீஸான சச்சின்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
தளபதி விஜய்யின் சச்சின்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், இதுவே தனது கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார்.
இதனால் ஜனநாயகன் திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், விஜய்யின் ரசிகர்கள் அனைவருக்கும் விருந்தளிக்கும் வகையில் சச்சின் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். 2005ம் ஆண்டு வெளிவந்த சச்சின் திரைப்படத்தை 20 ஆண்டுகள் கழித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு ரீ ரிலீஸ் செய்துள்ளார்.
இப்படத்தில் விஜய், ரகுவரன், ஜெனீலியா, வடிவேலு, சந்தானம் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஜான் மஹேந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
வசூல் விவரம்
உலகளவில் வெளிவந்துள்ள சச்சின் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் , ரீ ரிலீஸ் ஆகியுள்ள சச்சின் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 1.9 கோடி வசூல் செய்துள்ளது.