ரீ ரிலீஸான குஷி படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
குஷி
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குஷி.
இப்படத்தில் விஜயகுமார், விவேக், மும்தாஜ் ஆகியோர் நடித்திருந்தனர். தேனிசை தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏ.எம். ரத்னம் இப்படத்தை தயாரித்திருந்தார்.

என் அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளி சென்றார், ஆனால் நான்.. கல்வி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
ரீ ரிலீஸ்
காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றியடைந்தது. குஷி திரைப்படம் 25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. திரையரங்கில் இப்படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல்
நேற்று திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி படம், முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரீ ரிலீஸில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள ஆவரேஜான வசூல் என்கின்றனர்.