"என்னால் அரசியலுக்கு வரமுடியவில்லை" - மிகுந்த வலியுடன் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை..!

Rajinikanth Politics Withdrawal
By Balakumar Dec 29, 2020 11:57 AM GMT
Report

சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

மேலும் சமீபத்தில் அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் சென்னை திரும்பினார், ஆனால் ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அவரின் அரசியல் கட்சி பெயர் குறித்து வரும் 31 ஆம் தேதி ரஜினி அறிவிக்கவிருந்த நிலையில், தற்போது அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மூன்று பக்க அறிக்கையில் "நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்”.

"என் உயிரே போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்பொழுது வரவில்லை என்று சொன்னால், நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக, என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை!" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US