எல்லாம் ஒரிஜினல் தங்கம்.. பொன்னியின் செல்வன் படத்தில் இதை கவனித்தீர்களா
பொன்னியின் செல்வன் படத்தில் உண்மையான தங்கை நகைகளா
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்காக தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
தற்போது பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நகைகள் பற்றிய ஒரு தகவலும் இடம்பெற்று இருக்கிறது. வரலாற்று காலத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இதில் அதிகம் நகைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

எல்லாம் உண்மையான தங்க நகை
இந்த படத்தில் பயன்படுத்தியது எல்லாமே உண்மையான தங்கை நகை தானாம். இந்த நகைகளை ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல நகை கடை தான் அந்த நகைகளை ஷூட்டிங்கிற்காக வழங்கி இருக்கிறார்கள்.
த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி ஆகியோர் உண்மையான தங்க நகைகளை போட்டுகொன்டு ஷூட்டிங்கிற்கு தயாராவது மேக்கிங் வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.