ரோஜா சீரியலில் இருந்து வெளியேறியது ஏன்?- முதன்முறையாக கூறிய வெங்கட், கொரோனாவால் இப்படியொரு பிரச்சனையா?
சீரியல் பிரபலங்கள் ஒரு சீரியல் நடிப்பது என்பது மட்டும் இருக்க மாட்டார்கள். எத்தனை வாய்ப்பு வந்தாலும் நேரம் இருந்தால் மற்ற சீரியல்களில் நடிக்க தொடங்கி விடுவார்கள்.
அப்படி தான் ரோஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என இரு சீரியல்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் வெங்கட், ஆனால் சமீபத்தில் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறினார்.
அந்த சீரியலில் இருந்து வெளியேறியது ஏன் என முதன்முறையாக பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 20 நாட்கள் தனிமையில் இருந்தேன், அப்போது எந்த பிரச்சனையும் இல்லை, அதன் பிறகு தான் பெரிய தாக்கம் ஏற்பட்டது. நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இதனால் இரண்டு சீரியல்களிலும் கஷ்டப்பட்டு நடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். ரோஜா சீரியலில் தனது வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை, அதுவும் ஒரு காரணம் தான் ரோஜா சீரியலில் இருந்து வெளியேற என கூறியுள்ளார்.