புதிய BMW பைக் வாங்கியுள்ள சீரியல் நிஜ ஜோடி ஆர்யன்-ஷபானா... போட்டோ இதோ
ஷபானா
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி ஹிட் தொடராக அமைந்தது.
அந்த தொடரை தொடர்ந்து சன் டிவி பக்கம் வந்தவர் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்தார், ஆனால் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.
பின் சீரியல் நடிப்பார் என்று பார்த்தால் விஜய் டிவி பக்கம் வந்தவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி கலக்கினார்.

ஆர்யன்
நடிகை ஷபானா செம்பருத்தி சீரியலில் நடிக்கும் போது நடிகர் அர்யனை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.
மாடலாக வலம்வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சமி சீரியலில் முதலில் செழியனாக நடித்து வந்தார், பின் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
தற்போது ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் BMW பைக் ஒன்றை வாங்கியுள்ளனர்.
புதிய பைக்குடன் அவர்கள் வெளியிட்ட போட்டோ இதோ,
SA20 தொடரில் கலக்கும் தமிழ் வம்சாவளி பிரெனலன் சுப்ராயன் - வைரலாகும் ஓம் சரவண பவ டாட்டூ News Lankasri