பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமல் விலக கூறப்படும் வேறுசில காரணங்கள் ! என்ன தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
புதிய முயற்சியாக இந்த பிக் பாஸ் அல்டிமேட் 24 மணிநேரகமாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார், ஆனால் திடீரென அவர் ஷூட்டிங் நிகழ்ச்சியென இரண்டையும் சமாளிக்கமுடியவில்லை என பிக்பாஸ் அல்டிமேட்-ல் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருக்கு பதிலாக தற்போது நடிகர் சிம்பு தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கிடையே கமல் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு வேறொரு காரணம் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லாததே கமல் விலக்கியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் விக்ரம் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்து இருந்தார். கமலின் பாகம் கடந்த மாதமே நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விக்ரம் படத்தை காரணம் காட்டி கமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.