லியோ இசை வெளியிட்டு விழா தடைப்பட்டதற்கு காரணம் இதுதானா..! வருத்தத்தில் ரசிகர்கள்
லியோ இசை வெளியிட்டு விழா
விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த மாதம் காத்திருந்த ஒரே ஒரு விஷயம் லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா. இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசப்போவது என்ன, 'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று அவர் சொல்லி கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.
ஆனால், அவை யாவும் நடக்கப்போவதில்லை என அதிர்ச்சியளிக்கும் தகவல் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
காரணம் இதுதானா
டிக்கெட்ஸ் மோசடி நடந்துள்ளதால், இசை வெளியிட்டு விழாவில் எந்த விதமான அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் இப்படியொரு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரியில் இதுபோன்ற டிக்கெட்ஸ் மோசடி நடந்ததன் காரணமாக தான் பல ஷாக்கிங் விஷயங்கள் நடந்தது. சிலர் மயக்கம்போட்டு விழுந்தனர். சிலர் தங்களுது பிள்ளைகள் காணபோக இருந்தார்கள் என ஊடங்கங்களில் கூறினார்கள்.
இதுபோல் லியோ இசை வெளியிட்டு விழா ஆகிவிட கூடாது என்பதற்காக தான் ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் ஒரு பக்கம் வருந்தினாலும், தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவும் ஒரு வகையில் நல்லது தான் என பலராலும் பார்க்கப்படுகிறது.