ரஜினியின் அதிரடி முடிவுக்கு காரணம் இது தானாம்! மனதை மாற்றியது இவர்களே! முக்கிய சந்திப்பு! வெளியானது பின்னணி உண்மை!

Rajinikanth Politics Decision
By Balakumar Dec 31, 2020 06:45 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியல் தொடங்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அவரின் இந்த முடிவு அரசியல் கட்சியினருக்கு அடி வயிற்றில் பால் வார்த்தது போல இருக்கலாம். குறிப்பாக அவரை விமர்சிப்பதை குறிக்கோளாக வைத்திருந்த சிலருக்கு.

உடல் நலம் காரணமாக அவர் எடுத்த இந்த முடிவை எடுத்ததை அவரின் தீவர ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரிடம் ஆதரவு கேட்க சில கட்சியினர் காத்திருக்கின்றனர்.

அவரின் இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. ஆனால் அவர் எந்த மிரட்டலாலும் என்னை பணியவைக்க முடியாது என கூறியிருந்தார்.

அவரின் நலன் விரும்பிகள் சிலர் அவர் ஆன்மீகவாதி, வாழ்க்கையில் எல்லாம் சாதித்து விட்டார், அரசியல் சாக்கடையில் விழவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு வட்டாரங்களில் வேறு சில தகவல்கள் செய்திகளாக வந்துள்ளனவாம்.

இதில் அண்ணாத்த படப்பிடிப்பு சமயத்தில் தெலுங்கு சினிமா நடிகர்களான மோகன் பாபு, சிரஞ்சீவி ஆகியோர் சந்தித்து பேசிய போது அவர்களின் அரசியல் குறித்து ஆலோசனை கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதற்கு அவர்கள் அரசியல் என்பது ஓர் அழுக்கு படிந்தத் துறை. ஒரு திரைப்பட நடிகராக நீங்கள் அனுபவிக்கும் மரியாதையும் பாசமும் நீங்கள் அரசியலில் நுழைந்தால் இருக்காது' என்று சிரஞ்சீவியும் மோகன் பாபுவும் ரஜினியை எச்சரித்ததாகவும் கூறப்பட்டுள்ளன.

குறிப்பாக சிரஞ்சீவி அரசியலில் தனக்கு நிகழ்ந்த சொந்த அனுபவத்தை முழுமையாக ரஜினியிடம் விளக்கினாராம்.

இதில் அரசியல் பல மன அழுத்தங்களை ஏற்படுத்தும், அதற்கு மத்தியில் அரசியலில் வெற்றி பெறுவது கடினம், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பரவாயில்லை, தவறினால் இழிவாக பார்க்கப்படுவோம், பலவீனமாக ஆரோக்கியத்தை ஏற்படுத்தும், இப்போது அரசியலில் நுழைவது நல்லதல்ல என கூறினார்களாம்.

இவர்கள் இருவரும் தான் ரஜினியை மனம் மாற்றிவிட்டாகள், அதனால் தான் ரஜினி அரசியலில் இருந்து விலகும் முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் ரஜினி தான் ஏற்கனவே கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டதாகவும், அதிலிருந்து விலகினால் அது விமர்சனத்தை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தான் ரஜினிக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட அவர் அரசியல் கட்சி தொடங்குவதிலிருந்து பின் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US