திடீரென ரோபோ சங்கர் மெலிந்துபோக என்ன காரணம்.. உடல்நிலை சரியில்லையா, உண்மை இதோ

By Kathick Apr 20, 2023 06:00 AM GMT
Report

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் படுவைரலாகி வருகிறது.

திடீரென அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் ரோபோ சங்கரின் உடல் எடை குறைந்தது. அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்த நம்ம ரோபோ சங்கரா இது என்றும் கேட்டனர்.

திடீரென ரோபோ சங்கர் மெலிந்துபோக என்ன காரணம்.. உடல்நிலை சரியில்லையா, உண்மை இதோ | Reason Behind Robo Shankar Weight Loss

ஏன் இப்படி மாறிவிட்டார், அவருக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில், இதுகுறித்து ரோபோ சங்கரின் குடும்ப நண்பரும், பிரபல நடிகருமான போஸ் வெங்கட் பேசியுள்ளார்.

உண்மை இதோ

அவர் கூறியதில் 'ரோபோ சங்கர் மிகவும் நல்லவர். அவருடைய குடும்பமும் என்னுடையும் குடும்பமும் நெருக்கமாக தான் இருக்கிறோம். நான் என்ன சொல்லும் அவரும், அவருடைய குடும்பமும் கேட்டு கொள்வார்கள்'.

'உடல்நிலை சரியில்லை என்பது உண்மை தான். நல்லபடியாக உடல்நிலை தேறி வந்துவிட்டார். மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாய் குணமாகிவிடுவார். அதன்பின் மீண்டும் பழையபடி உடல் எடையை அதிகரிக்க கவனம் செலுத்துவார். உடல் நிலை சரியில்லாமல் போவது இயல்புதான்'.

திடீரென ரோபோ சங்கர் மெலிந்துபோக என்ன காரணம்.. உடல்நிலை சரியில்லையா, உண்மை இதோ | Reason Behind Robo Shankar Weight Loss

'ஆனால், சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அது பெரிய விமர்சனமாக மாறிவிடுகிறது. அது தான் தற்போது ரோபோ சங்கருக்கும் நடந்துள்ளது' என்று கூறியுள்ளார்.


நடிகை சமந்தா அதை இழந்துவிட்டார்.. இனி மீண்டும் அவருக்கு அது கிடைக்காது 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US