Rewind: நின்றுபோன நடிகை திரிஷாவின் திருமணம்.. காரணம் இதுதானா

By Kathick Mar 15, 2026 03:45 AM GMT
Report

நடிகை திரிஷா

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருபவர் நடிகை திரிஷா. மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்ததாக திரிஷா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கருப்பு. இப்படம் தேர்தலுக்கு பின் வெளியாகும் என கூறப்படுகிறது.

Rewind: நின்றுபோன நடிகை திரிஷாவின் திருமணம்.. காரணம் இதுதானா | Reason Behind Trisha Called Off Her Marriage

சமீபத்தில், நடிகர் விஜய்யுடன் இணைந்து திருமண விழா ஒன்றில் நடிகை திரிஷா கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின், பலரும் தங்களுடைய கருத்துக்களையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். இதுகுறித்து விமான நிலையத்தில் திரிஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், எந்த ஒரு பதிலும் கூறாமல் மௌனமாகவே கடந்து சென்றுவிட்டார் திரிஷா.

Rewind

இந்த நிலையில், திரிஷாவின் திருமணம் நின்றுபோன காரணம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகை திரிஷாவிற்கும், வருண் மணியன் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென இவர்களுடைய திருமணம் நின்றுபோனது.

Rewind: நின்றுபோன நடிகை திரிஷாவின் திருமணம்.. காரணம் இதுதானா | Reason Behind Trisha Called Off Her Marriage

16 நாட்களில் உலகளவில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

16 நாட்களில் உலகளவில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்த திருமணம் நின்றுபோக காரணம், திரிஷாவை திருமணம் செய்துகொள்ளவிருந்த நபர், திருமணத்திற்கு பின் திரிஷா நடிக்கக்கூடாது என கூறியதாகவும், அதற்கு திரிஷா, நடிப்பை தேர்ந்தெடுத்து திருமணத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன் என்றும் உறுதியாக இருக்கிறாராம் திரிஷா.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US