வேற லெவலுக்கு சென்ற விஜய்.. 200 கோடி சம்பளம் வாங்க இதுதான் காரணம்
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் லியோ திரைப்படம் இதுவரை ரூ. 400 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது.
இதுவே விஜய்யின் திரைவாழ்க்கையில் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்ட திரைப்படம் என கூறப்படுகிறது.
200 கோடி சம்பளம் வாங்க காரணம்
இந்நிலையில், லியோ திரைப்படம் ரூ. 400 கோடி பிசினஸ் ஆனதால் தான், தளபதி 68 படத்திற்கு ரூ. 200 கோடி சம்பளம் தருகிறோம் என ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் காயத்ரியின் அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
