விடுதலை படத்தில் சூரியை ஏன் விஜய் சேதுபதி கொல்லவில்லை.. காரணம் இதுதானா
விடுதலை 1
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கவுதம் மேனன் உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.
கதைப்படி பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியையும், அவருடைய மக்கள் படையையும் காவல் துறை சிறப்பு படை அமைத்து தேடி வருகிறது.
இந்த சிறப்பு படையில் கார் டிரைவராக பணிபுரிகிறார் சூரி. இந்த சமயத்தில் தமிழரசி பெருமாள் வாத்தியாரின் உறவுக்கார பெண் என்பது தெரியாமல் அவர் மீது காதலில் விழுகிறார் சூரி.
சிறப்பு படையில் சூரியை கொலை செய்ய மக்கள் படை திட்டம் தீட்டினாலும், பெருமாள் வாத்தியார் விஜய் சேதுபதி அதற்க்கு அனுமதி தரவில்லை. மேலும் சூரியை கொல்லவேண்டாம் என்றும் உறுதியாக கூறிவிட்டார்.
காரணம் இதுதானா
இதற்க்கு என்ன காரணம் என்று பலருக்கும் தெரியவில்லை. தன்னுடைய உறவுக்கார பெண்ணான தமிழரசியை சூரி காதலிப்பதை விஜய் சேதுபதி தெரிந்துகொள்கிறார்.
அது எப்படி என்றால், படத்தில் இடம்பெறும் திரையரங்க காட்சி ஒன்றில் சூரி மற்றும் தமிழரசி இருவரும் படம் பார்க்க சென்றிருப்பார்கள். அப்போது விஜய் சேதுபதியும் சூரியின் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்.
இதை படம் பார்க்கும் போது பலரும் கவனிக்கவில்லை என்றாலும், தற்போது வைரலாகி வருகிறது. சூரி தமிழரசியை காதலிப்பதை தெரிந்துகொண்டதால் தான் சூரியை கொல்லவேண்டாம் என விஜய் சேதுபதி முடிவு செய்திருப்பார் என கூறப்படுகிறது.
இல்லை வேறு எதுவும் காரணம் இருக்கிறதா என்பதை விடுதலை இரண்டாம் பாகத்தில் பொறுத்திருந்து பார்ப்போம்.
விடுதலை 1 திரை விமர்சனம்