நடிகை சித்தாரா 50 வயதிற்கு மேல் ஆகியும் திருமணமே வேண்டாம் என இருப்பது ஏன்?... காரணம் இதுதான்
நடிகை சித்தாரா
மலையாளத்தில் 1986ம் ஆண்டு வெளியான காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகை சித்தாரா.
மம்முட்டி-மோகன்லால் நடித்த அப்படம் சித்தாராவிற்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. முதல் படமே வெற்றி பெற்றதால் மலையாளத்தில் அடுத்தடுத்து படங்கள் நடித்தார். தமிழில் இயக்குனர் கே.பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் உன்னைச் சொல்லி குற்றமில்லை, புரியாத புதிர், பொண்டாட்டியே தெய்வம் என பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
திருமணம்
50 வயதிற்கு மேல் ஆகியும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார், காரணம் காதல் என கூறப்படுகிறது. அப்பா இறந்த பிறகு குடும்ப பொறுப்புகளை சுமந்ததால் சித்தாரா திருமண வாழ்க்கை தள்ளிப்போனது என கூறப்படுகிறது.
ஆனால் அதையும் தாண்டி அவரது வாழ்வில் ஒரு காதல் இருந்ததாகவும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
மனதிற்கு நெருக்கமான அந்த காதல் கைகூடாததால் ஏற்பட்ட வலியின் காரணமாக, அவர் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய விரும்பவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.