பீஸ்ட் தோல்விக்கு இதுதான் காரணம்? மறைமுகமாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்
விஜய்யின் பீஸ்ட் படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. வார இறுதி நாட்களில் வழக்கமாக வசூல் அதிகம் இருக்கும், ஆனால் பீஸ்ட் பற்றி வந்த நெகடிவ் விமர்சனங்களால் அது பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட விழாவில் பேசிய அருண் பாண்டியன் விஜய் அஜித் படங்களை தாக்கி பேசி இருக்கிறார். பீஸ்ட் தோல்விக்கு என்ன காரணம் எனபது பற்றி மறைமுகமாக பேசி இருக்கிறார் அவர். அருண் பாண்டியன் கோலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்பது குறிப்பிடதக்கது.
'மற்ற மொழி படங்கள் இங்கே கொடி கட்டி பறந்துகொண்டிருக்கின்றன, இங்கே விஜய் அஜித் படங்கள் சினிமாவுக்கு செலவு செய்வது கிடையாது, அவர்களுக்கே செலவு செய்து கொள்கின்றனர்.'
'90 சதவீதத்தை அவர்கள் சம்பளமாக பெற்று கொள்கின்றனர். மீதம் இருக்கும் 10 சதவீதத்தை வைத்து எப்படி நல்ல படம் எடுக்க முடியும்' என அருண் பாண்டியன் தாக்கி பேசி இருக்கிறார் அருண் பாண்டியன்.
பீஸ்ட் தோல்விக்கு இதுதான் காரணம் என அவர் மறைமுகமாக பேசி இருக்கிறார்.